பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டுப் பாடல்கள் 13

"இலையுதிரப் பிஞ்சுவிடும்” 'வண்டாடப் பூமலர' சாலை வழியுறங்க "பாதிநிலாத் தான்் தூங்க சொல்லாற் புகழடைக்கும்.

என்றெல்லாம் வருகின்ற தொடர்கள், பல இலக்கிய நயத்தின் எல்லையையே எட்டிப்பிடிக்கின்றன.

ஈழநாட்டுத் தாலாட்டில்தம்பி அழுத கண்ணி ஆறாகப் பெருகுங் கற்பனையும், பாண்டிய நாட்டுத் தாலாட்டில் குழந்தையை அடித்தவர்கட்குத் தாயாட்சியில் அளிக்கப்படும் தண்டனையும், சோழநாட்டுத் தாலாட்டில் தச்சரின் பொறுமை பற்றிய செய்தியும் போன்ற பல இடங்கள் நகை என்னும் சுவைக்கே எல்லை வகுக்கின்றன. சோழநாட்டுப் பா ஒன்று ஊஞ்சலின் சிறப்பையும், தாய்மாமன் தரும் சீர் வரிசைகளின் பெருமையையும் விளக்குகிறது. "காது குத்து விழா' சோழ நாட்டில் மிகச் சிறப்புடையதோர் சடங்கு என்பதனை அப் பகுதித் தாலாட்டு எடுத்தியம்புகிறது. ஈழநாட்டு மருத்துவச்சி வாழ்த்து. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற புறநானூற்று வரிகளை நினைவு படுத்துகிறது. பொதுவாக 'ஏலப்பூ', 'இலஞ்சிப்பூ என்றெல்லாம் குழந்தையை உவமிப்பது சங்கப் புலவர்களின் இயற்கை அறிவினை நினைவூட்டுகிறது. தொட்டில் வருணனையும், பாலூட்டும் சங்கின் அழகும் கம்பனைக்காட்டுகின்றன. குழந்தையைத் தாய் பாராட்டும்போதெல்லாம் பாரதியாரின் கண்ணன் பாட்டும்,தேவார, திருவாசகமும் நினைவிற்கு வருகின்றன. 'சந்தணர், என்ன ரியான் புனக்கிளி, திசைக் கருணர்