பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

21


பாட்டுப் பாடுதலுமே தாலாட்டு என்று வழங்கிவருகின்றன. (தாலு ஆட்டு, தாலாட்டு; தாலு-நா.).

உண்மையான பக்தி பூண்ட அடியவர்கள் இறைவனிடத்திலே எத்தனையோ விதங்களில் நெருங்கி உரிமை பாராட்டிச் சொற்களாலே குலவுகிறார்கள். ஆண்டான், அடிமை என்ற தொடர்பை வைத்துக்கொண்டு தாம் அடிமையாயிருந்து, தமக்கு அவனுடைய அருள் வேண்டுமென்று அடியவர் அந்த ஆண்டவனிடத்திலே நெருங்கிய தோதுமை பூண்டு, அந்த பாவத்திலே, தமக்கு வேண்டுவனவெல்லாம் தரும்படி அவனைக் கேட்பது மற்றொருவகை. எப்பொருட்குந்தலைவனாக இறைவனை நாயகனாகப் பாவித்துத் தம்மை நாயகி நிலையிலே வைத்துக் குலவிப் பாடுவது இன்னும் சிறப்பானது. ஆனால், சீவிலிபுத்தூர்ப் பட்டரான விண்டு சித்தர் என்று வழங்கிய பெரியாழ்வார் இந் ளநிலைகள் அனைத்திலும் மேலானதோர் அனுபவத்தைத் தமிழ்ப் பாடல்கள் மூலமாக நமக்குக் காட்டுகிறார்.

பக்தியினாலே கனிந்த அவருடைய இதயமானது தாய்மை நிலையை அடைந்திருக்கிறது. திருமாலைப்பற்றி எண்ணுந்தோறும், அவருள்ளத்திலே அவன் ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணனாகிய குழந்தைக் கண்ணன் கோலத்தோடேயே தோற்றுகிறான். தாயானவள் குழந்தையைத் கண்டுவிட்டால் கொஞ்சுவதற்குக் கேட்கவா வேண்டும்? ஆயர்பாடியில் கண்ணன் அவதரித்த சிறப்பையே பல பாடல்களால் பாடிப் பாடி இன்புறுகிறார் ஆழ்வார். பிறகு அத் தெய்வக் குழந்தையின் உருவ அழகை உள்ளங்கால் தொட்டு