பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பாரதிதாசன்


உச்சிவரைப் பாதாதி கேசமாகப் பார்த்துப் பார்த்து அனுபவிக்கிறார்; தம் கற்பனையில் ஆயர்பாடிப் பெண்கள். அனைவரையும் அழைத்து அவ் அழகை ஒவ்வொன்றாகக் காட்டுகிறார்.

இவ்வாறு அவர் காட்டி வருகின்ற நிலையிலே, குழந்தைக் கண்ணன் அழுகின்றான் என்ற ஓர் எண்ணம் தோன்றிவிடுகிறது. ஆயர்பாடியிலே அளவற்ற மாயங்கள் செய்த அம் மாயன் அழுவதாக ஆழ்வார்தம் தாயுள்ளம் எண்ணியதில் வியப்பில்லை. அழுகையை ஓயப்படுத்துவதற்கு எளிதான வழி இல்லாமலா போய்விட்டது? உடனே அருமையான தொட்டில் ஒன்றை அங்கே கொண்டு வருகிறார் ஆழ்வார். தொட்டில் யார் தந்தது? மாயக் கண்ணனுக்கு யாரால்தான் தொட்டிலமைக்க முடியும்? உலகனைத்தையும் படைத்த பிரமனே, படைத்துப் படைத்துத் தேர்ந்த தன் கைகளால், அழகிய சிறு தொட்டிலை ஆணிப்பொன்னாலே செய்து, அதில் மாணிக்கமும் வயிரமும் இழைத்து, கொண்டுவந்து தருகிறான். மாயம் வல்ல கண்ணன் அதில் உறங்குவானா? அவனோ, உலகெல்லாந் தனது ஓரடியால் அளந்த ரிெயவனாயிற்றே? எந்தத் தொட்டிலில் அவனைக் கண்வளரச் செய்யமுடியும் என்றெல்லாம் ஆழ்வார் அஞ்சவேயில்லை. அழகிய குறள் வடிவங்கொண்ட வாமனன் அல்லவா, இக்கண்ணன்? தொட்டிலிலே கண் வளர்வதற்கு என்ன தடை? ஆழ்வார் இப்படி அவனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுப் பாடுகிறார்;

மாணிக்கங் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னாற்செய்த வண்ணச் சிறுதொட்டில்-