பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30
பாரதிதாசன்
 

அனுபவித்திருக்கிறார். அது காரணமாக, பழனிக் குமாரக் கடவுளை 'வருக' என்று அழைக்கும் போதுகூட, இவர் தாலாட்டை மறக்க முடியவில்லை. வருகைக்குரிய மூன்று பாடல்களில் ஒன்றைக் தாலாட்டாகவே பாடியிருக்கிறார்.

சாதாரணமாக ஓர் அதிகாரி என்றாலே, உலகத்தார் எவ்வளவோ வந்தனையும் வழிபாடும் செய்கிறார்கள். அப்படியானால் அரசனுக்கு எவ்வளவு வழிபாடு செய்ய வேண்டும்? இவ்வுலகம் மட்டுமல்லாமல், வானுலகமென்ன, மற்ற அண்டங்களென்ன - யாவற்றுக்கும் முதல்வனாயுள்ள பரம்பொருளுக்கு உலகத்தவர் என்ன வந்தனை வழிபாடுசெய்யவேண்டும்? எங்குமே அவன் சன்னிதி. ஆகவே, அவன் சன்னிதியில் நில்லாமலோ, அவனைக் கண்டு வணங்காமலோ, எவர்தாம் இருக்கமுடியும்?

சீரார் நலஞ்சேர் பூவுலகில்
தேவாசுரரில் மற்றையரில்
தினமும் உனது கொலுக்காணச்
செல்லாதார் ஆர்?

காணிக்கை செலுத்தாதவர்கள்தாம் யார்? வந்த வணங்குவதற்குச் சமயம் எப்போது வாய்க்கும் என்று காத்திருந்து வாராதவர்கள் யார்? ஒருவருமே இல்லை.

திறை வளங்கள்
தாராதார் ஆர்? உனது பதம்
தனையே வணங்கித் தொழவேண்டித்
தழுவாதார் ஆர்? எவ்வேளை
சமயம் கிடைக்கும் என நினைந்து