பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 பாரதிதாசன்

தாலாட்டும் பள்ளும் தாலாட்டுப் பாட்டிலே நம் கவிஞர்களுக்குள்ள ஈடுபாடு காரணமாக, எப்போது எப்போது அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம், எளிதாக அழகிய சிறு தாலாட்டொன்றைப் பாடிவிடுகிறார்கள்.தாலாட்டுப்பாடல் உள்ளத்திலே எழுப்புகின்ற இன்பமான நினைவுகளும், பாடலின் சுகமுமே இப்படிப் பாடுவதற்குக் காரணங்கள்.

பள்ளுப் பாட்டிலே பொதுவாக நாம் தாலாட்டைப் பார்ப்பதில்லை;தாலாட்டுக்கு அதில் சந்தர்ப்பமும் குறைவு. ஆயினும், நம்முடைய கவிஞரொருவர் சந்தர்ப்பத்தைச் சிருட்டித்துக்கொள்ளுகிறார்.

பள்ளியர் பலர் மிக்க உல்லாசத்தோடு நடவு நட வருகிறார்கள். இளம் பள்ளியர், முதிய பள்ளியர், அன்றி இடுப்பிலே குழந்தையை இடுக்கிபடியே வந்த பள்ளியர் - என இவர்கள் பலவகை. இளையவளும் முதியவளும் வயற்கரையை அடைந்தவுடன், நேரேசேற்றில் இறங்கிவிட முடியும். ஆனால் குழந்தையோடு வந்தவள் என்ன செய்வாள்? குழந்தையை எங்கு விடுவாள்?

நாம் தெருவிலே பார்க்கிறோம் அல்லவா? - சென்னைக் கார்ப்பொரேசன் ஊழியர்களாயுள்ள பெண்கள் சாலைகளில் மராமத்து வேலை செய்யும்போது, சாலையோரமுள்ள மரங்களில் ஏணைகட்டி அதில் குழந்தைகளைக் கிடத்தி ஆட்டி உறங்க வைத்துவிட்டுத் தங்கள் வேலைகளைக் கவனிக்கிறார்கள். குருகூர் ஆழ்வார் பண்ணையில் நடவு நடவந்த பள்ளியரும் இப்படியே செய்கிறார்கள்.

வயல் வரப்புகளிலும் வாய்க்கால் கரைகளிலும் வேம்பு