பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 பாரதிதாசன்

தொழில் செய்வதைப் போலவே தொடர்ந்து செய்வதற்கு ஏற்ற பிள்ளையும் பெண்ணும் பெற்றமை குறித்து இத் தாய்மார்களுக்கு என்ன மகிழ்ச்சி, என்ன உல்லாசம் மேழிச் செல்வமாகியபெருஞ் செல்வத்தை ஈட்டுபவன் ஆதலால், பள்ளனை எப்படிச் சிறப்பித்தாலும் தகுமல்லவா? பிள்ளையைப் பார்த்துச்சொல்கிறாள் பள்ளி:

சேறாடி சூழச்

சிறந்த குடைநிழற்ற வீறாய் முரசதிர

விளையாடுவான் மகனோ. கோழைபடாத மேழிச் செல்வத்தைத் தேடுகின்ற பள்ளன், குடை நிழற்றவும் முரசதிரவும் விளையாடுவான் என்றால், மிகையன்று. - இதையொத்த பாவத்தில் மற்றவள் பாடுகிறாள்:

அரவணை யானைப் பரவும்

ஆழ்வார் வளவயலிற் குரவையிட்டுக்களைபறிக்கும் கோமளப் பெண்ணாரமுதோ. கோமளப் பெண் - ஆம் உலகமெல்லாம் உண்ண வேண்டும் என்பதற்காக, நடவுநட்டு, குரவையிட்டுக்களை பறிப்பவள்கோமளப் பெண்ணாரமுதான்், சந்தேகமில்லை. இப்படியெல்லாம் குழந்தையைப் பள்ளி எவ்வளவோ கொஞ்சியாயிற்று. சரி, ஆனால் இக் குழந்தையால் பண்ணைத் தலைவரான ஆழ்வாருக்குப் பயனுண்டா?

கேட்பானேன்? எவ்வளவோ உண்டு, ஆழ்வார் அமுது