பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

35


செய்வதெல்லாம் இவன் விளைவித்துக் கொடுக்கின்ற உணவு தானே? இந்த பாவத்தில் வருகிறது பாட்டு:

வளஞ்சேர் குருகைமகிழ்
மாறர் அமுதுசெய்யக்
களஞ்சியத்தில் நெல்லளந்து
கட்டப் பிறந்தானோ.

சரி ஆண் குழந்தைதான் ஆழ்வாருக்கு இப்படித் தொண்டு செய்வான். பெண் குழந்தை?

மற்றவள் சொல்கிறாள். நெல் விளைந்தால் போதுமா? அது களத்திலே கண்டு முதல் பண்ணும்போது, சிந்தி மங்கிச் சீரழியாமல் பெருக்கிச் சேர்க்கவேண்டாமா? இது பெண் செய்யவேண்டிய வேலை. வழக்கமாய் ஆண் செய்வதன்று. களத்திலே தன் பெண் ஆழ்வாரின் அமுதுக்குரிய நெல்லைப் பெருக்கிச் சேர்ப்பாள் என்ற எண்ணமே, தனக்குப் பெருவாழ்வையே சேர்த்து தந்ததுபோல இருக்கிறது இப் பள்ளிக்கு.

தண்ணிலஞ்சி
மாறர் களம் பெருக்கிப்
பெருவாழ்வு எனக்கு வரப்
பிறந்த மகளாரோ.

இங்ஙனமாகப் பள்ளியர் தங்கள் பிள்ளையையும் பெண்ணையும் தாலாட்டும் இச் சிறு தாலாட்டு, ஆழ்வாருக்கும் நமக்குமே பெரிதும் உவப்பான தாலாட்டு என்பதில் சந்தேகமில்லை.