பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

பாரதிதாசன்



நீலமயில் வாகனன்

சுமார் ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பரத நாட்டியக் கலை புத்துயிர் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது. குமரி முதல் இமயம் வரை, தமிழ் மக்கள் உள்ள இடமெங்கும் குழந்தைகள் இந்தக் கலையைக் கற்றுப் பரத நாட்டியமும் அபிநயமும் செய்கிறார்கள். தமிழ் மொழி அல்லாத பிறமொழிக்குரிய இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் அயல் நாட்டு மக்களும் கூட, இந்தக் கலையைக் கண்ணால் கண்டு வியந்து போற்றுகிறார்கள்; தாங்களும் கற்று இக்கலையில் வல்லவர்களாக முயல்கிறார்கள். இவ்வளவுக்கும் தோற்றுவாயாக இருந்தது சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் கற்றவர்களிடை புதிதாக அறிமுகமும் அங்கீகாரமும் பெற்று வந்த திருமதி பாலசரசுவதியின் பரத நாட்டியம் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை, டி.கே.சி. அவர்களுடைய இடைவிடாத பாராட்டுதலினாலும், கல்கி அவர்கள் எழுதி வந்த ஆனந்தவிகடன் பத்திரிகையின் பிரசாரத்தாலும், பரத நாட்டியக் கலை தமிழ் நாட்டில் பிரசாரம் அடைந்தது.

குறிப்பிட்ட சில பாடல்களுக்கு திருமதி பாலசரசுவதியின் அபிநயம் மிகவும் பிரசித்தம். இக்காலம் போல் அன்றி, அந்தத் தொடக்கக் பாடல்கள் யாவும், ஒருவகையில், வாழ்க்கையை உயர்த்துவனவாயும் தெய்வ பக்தியை ஊட்டுவனவாயும் இலக்கிய உணர்ச்சியை வளர்ப்பனவாயும் இசையின் நயத்தை எடுத்து விளக்குவன வாயும் அமைந்திருந்தன. யாரும் எதுவும் பாடலாம் என்ற நிலை அப்போது இல்லை; புராதனமான இசை நுட்பமும்