பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டுப் பாடல்கள் 37

இறை உணர்ச்சியும் பொருந்தி பாடல்கள் மட்டுமே பரத நாட்டியத்துக்குப் பயன்பட்டன. அவ்வாறு வழங்கிய சிறந்த பாடல்களுள், முருக்ப்பெருமான்தாலாட்டாகிய"நீலமயில் வாகனனோ” என்பது முக்கியமான ஒன்று. முருகப் பெருமான் திருவடியில் எல்லையற்ற பக்தி பூண்ட திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் போரூர் முருகனைத் தாலாட்டுகிறார்.

முருகனை வழிபடும் அடியவர்கள் வேலும் மயிலும் துணை' என்பார்கள். உலகத்தில் நிலவும் அஞ்ஞான இருளைப் போக்கி ஞான ஒளியை வீசுவதாகிய சக்தி வேல் அவன் கையில் உள்ளது. வேல் என்றாலே ஞானத்தின் அடையாளம். அதை த்துலமான ஓர் ஆயுதமாகக் கொள்ளும்போது, அது நீண்ட இலையுடைய வேலாயுதமாய்க்காட்சியளிக்கிறது.நீலநிறத்தோடு எங்கும் கவிந்திருக்கிறவானமும் நிலமும் சேர்ந்து ஒருபெரிய மயில் வடிவமாகத் தோற்றுகின்றன. விசுவத்துக்கு நாயகனான முருகனுக்கு, அந்த மயில், வாகனம் என்பது நம் மக்களுடைய இயற்கை வழிபாட்டின் ஒரு தோற்றமே யாகும். மயிலைக் கண்டவுடன், முருகனை அடி பணிந்து அவனுடைய கொடியில் அமர்ந்திருக்கம் பேறு பெற்ற கோழியும் நினைவு வருதல் இயல்பு. இந்தக் குறிப்புகள் தூண்ட, தாலாட்டுப் பாடல் வருகிறது.

நீலமயில் வாகனனோ

நெட்டிலைவேலாயுதனோ கோலம்நிறை கோழிக்

கொடிபடைத்த சேவகனோ,