பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

39


பாவபூர்வமான இப்பாடல் ஆட்டத்துக்கும் பாட்டுக்குமாக எவ்வளவுதான் நெளிந்து கொடுக்கிறது!

முருகனைப் புகழும்போது, இலக்கியத் தொடர்புடைய பழங்கதைகள் எண்ணற்றன நினைவில் எழுகின்றன. நக்சீரர் முருகன் பாதுகாப்பைப் பெறும் பொருட்டுப் பாடியருளிய திருமுருகாற்றைப்படையும் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல்களும் தோன்றிய வரலாறுகள் முருகனுடைய பெருங்கருணைத் திறத்தைப் புலப்படுத்துகின்றன.

அருணகிரி நாதன்
அருந்தமிழ் நற் கீரன்
கருணை பெற ஓதும்
கவிமலைத் தோளானோ.

சைவ சமய சம்பிரதாயத்தில் இறைவன் குருவடிவாக வந்து ருணைபுரிகிறான் என்பது மிகவும் சிறப்பான ஒரு கருத்து. பிரமன் பிரணவத்தின் பொருள் அறியாமல் விழித்தபோது குழந்தை முருகன் அவனைக் குட்டிச் சிறையிருத்திப் பின்னர், சிவபிரான் கேட்க, பொருளை உரைத்தான் என்று கதைகள் குறிப்பிடும். இங்ஙனம் அவன் குருவாக வந்த நிலையைக் கூறி, அபிநயப் பாடல் முடிகிறது.

பிரமன் அறியாப்
பிரணவத்தின் அத்தம்
அரனார் மனங் குளிர
அன்றுரைத்த சற்குருவோ

?

முப்பது கண்ணிகள் கொண்டபோரூர் முருகன் தாலாட்டில், அபிநயத்துக்காகத் தேரந்தெடுக்கப்பட்ட இவ்வைந்து