பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

பாரதிதாசன்


மட்டும் அன்று, இத் தாலாட்டுப் பாட்டின் சாரமாகவே உள்ளன. இப் பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்த கலைப் புலமை, முத்தமிழ் இலக்கிய வுணர்ச்சிக்கே சிரமாயுள்ளது.


முல்லை நறுமலர்

இந்த இருபதாம் நூற்றாண்டில், கவிஞர்தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் தாலாட்டுபாடுகின்ற ஒரு தாயை நமக்குச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார். அத்தாயின் சொற்களிலே கவிதையின் எளிமையையும் கவிதைச் சுவையின் உயர்ந்த சாதனையும் நேர்முகமாய் நாம் கண்டு அனுபவிக்கிறோம்.

தமிழ் மக்களுக்குப் பூவினிடத்தில் எல்லையற்ற ஈடுபாடு. தாய்மைப் பேறடையப் போகும் பெண்ணுக்குச் செய்யும் சடங்குகளில் முதல் சடங்குப் பெயரே பூச்சூட்டல் என்பது. பூவிலே மக்கள் மனம் எப்போதும் ஈடுபட்டிருக்குமானால் கவிஞர் மனம் இன்னும் எவ்வளவு அதிகமாய் அதில் தோய்ந்திருக்கும்?

குழந்தைக்க உறக்கம் வரவேண்டிப் பாடத் தொடங்குகின்ற தாய் பாடுகிறாள்:

முல்லை நறுமலரோ
முருகவிழ்க்கும் தாமரையோ
மல்லிகைப் பூவோ
மருக்கொழுந்தோ சண்பகமோ,

தாய் சில மலர்களின் பெயர்களை மட்டுமே சொல்கிறாள். நிரல் படச் சொல்லுகிறாள். கற்பனைச் செறிவோ, கருத்துச் சிக்கலோ, சொல்லடுக்கோ காணப்படவில்லை. ஆனால், இவ்வரிகளில் தாய்மையின் பெருமிதம், உணர்ச்சியின் பெருக்கு, இயல்பான தாயன்பின் எளிமை, அழகுச்