பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பாரதிதாசன்




அனுபந்தம்

வாய் மொழிப் பாடல்கள் பலவும் இலக்கியப் பாடல்கள் சிலவும் இதுவரை நாம் பார்த்து வந்தோம். இனி, முதல் தாலாட்டுப் பாடல் பாடிய பெரியாழ்வாருக்குப் பின், புலவர்கள் பாடிய தாலாட்டுப் பாடல்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம். இயன்றவரை ஒவ்வொரு நூலுக்கும் சில மாதிரிக் கண்ணிகளும் தரப்பெற்றுள்ளன. இங்க இவை மூன்று பிரிவாகப் பிரித்திருக்கக் காணலாம்.

அ. பண்டை இலக்கியங்கள்.
ஆ. பிற்கால இலக்கியங்கள்.
இ. வாய்மொழி வழக்கு.

அ. பண்டை இலக்கியங்கள்

15ஆம் நூற்றாண்டில் எழுந்த சீகாழிச்சிற்றம்பல நாடிகள் தாலாட்டு முதல், நூற்றாண்டுதோறும் எழுந்த சில பிரபந்தங்கள் இவ் வரிசையில் அடங்கும்.

1. சீகாழிச் சிற்றம்பல நாடிகள் தாலாட்டு :

(காலம் 15ஆம் நூற்றாண்டு. சைவ சித்தாந் சமய முதல் ஆசாரியரான மெய்கண்டாருக்கு முந்திய குருபரம்பரையில் உள்ளவர். பல சிறு சமய நூல்கள் செய்தவர். இந்நூல் 63 கண்ணிகள் கொண்டது. சம்பிரதாயப்படி வாய்மொழியான தாலாட்டுப் பாடலில் காணப்படுகின்ற கருத்துப் போக்கு முழுமையும் கூட இங்குக் காணப்படுகிறது. குழந்தையின் புகழ், அவன் பேச்சு, யார் அவனை அழச் செய்தவர் என்று