பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

47



3. ஞான சம்பந்தர் தேசிகர் தாலாட்டு:-

(40 கண்ணிகள், தருமபுர ஆதீனம் நிறுவிய திருஞான சம்பந்தர் துதி. செய்தவர் வெள்ளியம்பலவாணத்தம்பிரான். 17ஆம் நூற்றாண்டு.)

கங்கை இளம்பிறையும் கண்அனலும்

மான்மழுவும் மங்கை இடமுமட மறைந்துலகில்

வந்தானோ பாலாட்டும் பொன்முடிமேல்
பாம்பாட்டல்

போல்சிறியேன் தாலாட்டும் தன் செவியில் சாத்தும்

தாயாபரனோ ஊனாய் உயிராய் உணர்வாய்

என்னுட் கலந்து தேனாய் அமுதமாய்த் தித்தக்குந்

தேசிகனோ ஊடுகினும் கூடுகினும் ஒக்கஎதில்

ஆடுகினும் கூட விளையாடும் கோமானைச்

சொன்னாரார் நாயேன் உமதடிக்கீழ் நாடோறும்

கண்வளரத் தாயே எனையாண்ட சற்குருவே
கண்வ ளரீர்.

நம்மாழ்வார் தாலாட்டு

(பழந்தமிழ்ப் புலவர்களில் நம்மாழ்வாரிடம் ஈடுபடாதோர் இல்லை. எல்லா வகையாலும் அவர்மீது புலவர்கள் பிரபந்தம் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். பிரபந்த