பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டுப் பாடல்கள் 51

ஆ. பிற்கால இலக்கியங்கள்

19,20ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய தாலாட்டுப் பாடல்களை இங்குக் காணலாம். டாக்டர் சாமிநாதையர் பாடியதாலாட்டுப் பாடலும், ராய.சொக்கலிங்கம் அவர்கள் பாடிய காந்தி தாலாட்டுப் பாடலும் இங்கக் குறிப்பிடத் தக்கவை.

7. சம்பந்தர் தாலாட்டு 1.

(19ஆம் நூற்றாண்டு. 30 கண்ணிகள். திருஞதன சம்பந்த சுவாமிகள் வரலாறு கூறுவது.)

குவிகைசென்னி கொண்டடியார் கூத்தாட முத்தின் சிவிகையினில் ஏறித் திசைவிளங்க வந்தாரோ?

மருகல் நகர்தன்னில் வணிகற்பணி தீண்டப் பொருகை வில்லானைப் போற்றியுயிர் தந்தாரோ?

ஆலங்காட்டப்பர் அயர்த்தனையோ பாடவென்று கோலங்காட்டடப்பதிகம் கூறித் தொழுதாரோ?

அங்கமதைப் பூம்பாவையாமயிலாப் பூரில்அருட் சங்கரர்பேரன்பாலித் தாரணியிற் கண்டரோ?

வாழி திருஞானசம்பந்தர் வாக்கரசர் வாழிநம்பி ஆரூரர் வாதவூ மன்னவனே!

8. சம்பந்தர் தாலாட்டு 2.

(19ஆம் நூற்றாண்டின் இறுதி. 42 கண்ணிகள். மகாவித்துவான் காஞ்சீபுரம் சபாபதி முதலியார். திருஞான