பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

பாரதிதாசன்


சம்பந்த சுவாமிகள் வரலாற்றைக் கூறுவது முந்தியதினும் வேறானது.)

எம்பந்த மெல்லாம் ஈடறுக்க வந்தருளும்
சம்பந்த னென்னும்பேர் தாங்கங் குருபரனோ?

மறைக்காட்டிற் சொல்லரசை மறையடைத்த
திருக்கதவம்
திறக்கும்வகை பாடுமெனச் செப்பும்
தவக்கொழுந்தோ.

ஆலவாய் கண்டுமங்கை யர்க்கரசி என்னுமிசைக்
கோலமிகு பதிகம் கூறிப் பணிகுருவோ?

வாழ்க அந்தணரென்னும் வாய்மைத் திருப்பதிகம்
வீழ்கங்கை நேர்மையை மேலெதிர விடும்தேவோ?

நன்றுதீ தென்றறியா நாயேன் வினையிருளில்
துன்றியலை யாதருளத் தோன்றுந் தினகரனோ?

9. ஏகநாயகர் தாலாட்டு.

(19ஆம் நூற்றாண்டின் இறுதி. 30 கண்ணிகள். "உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்கவே கடைக்கண் பார்” என்று மட்டும் வேண்டி டாக்டர் சாமிநாதையரவர்களையும் பாடும்படி செய்துவிட்டது தாலாட்டு இலக்கியத்தின் ஈடுபாடு, திருவிடை மருதூர் பற்றி ஐயரவர்கள் பாடியது.)

எல்லாத் தலத்தும் இடைமருதே மேலாமென்று
எல்லா மளித்தாட் கியம்பியருள் மாமணியோ!