பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப் பாடல்கள்

65




பெண்குழந்தை தாலாட்டு


ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ

சோலை மலரே! சுவர்ணத்தின்
வார்ப்படமோ
காலை இளஞ் சூரியனைக் காட்டும்
பளிங்குருவே!

வண்மை உயர்வு மனிதர்
நலம் எல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த
பெண்ணழகே!

நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும்
இப்புவிக்கும்
தாய் என்று காட்டத் தமிழர்க்கு
வாய்த்தவளே!

வெண் முத்தில் நீலம் விளையாடிக்
கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு, கனியே
உறங்குவாய்.