பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டுப் பாடல்கள் 71

நீதி தெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச் சாதி என்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்

கனல் ஏற்ற வந்த களிறே எனது மனது ஏறுகின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே!

தேக்கு மரம்கடைந்து செய்ததொரு தொட்டிலிலே ஈக்கள் நுழையாமல் இட்ட திரைநடுவில்

பொன்முகத்திலே இழைத்த புத்தம் புதுநீலச் சின்னமணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்!

அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக் கொள்ளைநோய் போல் மதத்தைக் கூட்டிஅழும்

வைதிகத்தைப்