பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

பாரதிதாசன்


போராடிப் போராடிப் பூக்காமல்
காய்க்காமல்
வேரோடு பேர்க்கவந்த வீரா
இளவீரா!

வாடப் பலபுரிந்து வாழ்வை
விழலாக்கும்
மூடப் பழக்கத்தைத் தீதென்றால்
முட்டவரும்

மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே
பூட்டவந்த
ஈடற்ற தோளா, இளத்தோளா
கண்ணுறங்கு!

எல்லாம் அவன் செயலே என்று
பிறர் பொருளை
வெல்லம் போல் அள்ளி விழுங்கும்
மனிதருக்கும்

காப்பார் கடவுள் உமைக் கட்டையில் நீர்
போகுமட்டும்
வேர்ப்பிர் உழைப்பீர் என உரைக்கும்
வீணருக்கும்

மானிடரின் தோளின் மகத்துவத்தைக்
காட்ட வந்த
தேனின் பெருக்கேஎன் செந்தமிழே
கண்ணுறங்கு! 1938