பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டுப் பாடல்கள் 81

ஏனழுதாய் என்றன் இசைப்பாட்டே கண்ணுறங்கு! வான்நழுவி வந்த வளர்பிறையே கண்ணுறங்கு!

கன்னம்பூரித்துக் கனியுதடு மின்உதிர்த்துச் சின்னவிழி பூத்துச்சிரித்ததென்ன செல்வமே?

அன்னைமுகம் வெண்ணிலவே ஆனாலும் உன்விழியைச் சின்னதொரு செவ்வல்லி ஆக்காமல் நீயுறங்கு!

நெற்றிக்கு மேலேயுன் நீலவிழியைச் செலுத்திக் கற்றார்போல் என்ன கருதுகின்றாய்? நீ கேட்டால்

ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித் தேனில்துவைத்தெடுத்து தின்என்று தாரேனா?

கொட்டித்தும்பைப்பூக்குவித்ததுபோல் உன்னெதிரில் பிட்டுநறு நெய்யில் பிசைந்துவைக்க மாட்டேனா?