பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

பாரதிதாசன்

குப்பை மணக்கக் குடித்தெருவெல்
லாம் மணக்க
அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க
மாட்டேனா?

மீன்வலைசேந் தும்கயிற்றை வேய்ந்த
வளையம்போல்
தேன் குழல்தான் நான் பிழிந்து தின்னத்
தாரேனா?

விழுந்துபடும் செங்கதிரை வேல் துளைத்
ததைப் போல்
உழுந்துவடை நெய்யொழுக உண்ணென்று
தாரேனா?

தாழையின் முள்போன்ற தகுசீ
ரகச்சம்பா
ஆழ உரலில் இடித்த
அவலைக்

கொதிக்கும் நெய் தன்னில்தான் கொட்டிப்
பொரித்துப்
பதக்குக் கொருபதக்காய்ப் பாகும்
பருப்புமிட்டே,

ஏலத்தைத் தூவி எதிர்வைக்க
மாட்டேனா?
ஞாலத்து ஒளியே நவிலுவதை
இன்னுங்கேள்: