இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தாலாட்டுப் பாடல்கள் 83
செம்பொன்னை மேற்பூசித் தேனைச் சுளையாக்கிக் கொம்பில் பழுத்தநறுங் கொய்யாப் பழமும்,
செதில் அறுத்தால் கொப்பரையில் தேன் நிறைந்ததைப் போல் எதிர்தோன்றும் மாம்பழமும், இன்பப் பலாப்பழமும்,
வேண்டுமென்றால் உன்னெதிரில் மேன்மேற் குவிந்து விடும்! பாண்டியனார் நன்மரபின் பச்சைத்
தமிழே:
நெருங்க உறவுக்கு நீட்டாண்மைக் காரர்
அறஞ்சிறந்த பல்போடி ஆன தமிழருண்டே! -
எட்டும் உறவோர்கள் எண்ணறு திராவிடர்கள் வெட்டிவா வென்றுரைத்தால் கட்டிவரும் வீரர்அவர்!
என்ன குறைச்சல் எதனால் மனத்தாங்கல்? முன்னைத் தமிழர் முடிபுனைந்து ஞாலத்தை