பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாலாட்டுப் பாடல்கள்
85
 

காவிரியின் பாதாளக் காலின்
சிலம்பொலியும்,
பூவிரியப் பாடும் புதிய
திருப்பாட்டும்,

கேட்ட உழவர் கிடுகிடென
நல்விழாக்
கூட்டி மகிழ்ச்சி குதிகொள்ளத்
தோளில்

அலுப்பை அகற்றி அழகுவான்
வில்போல்
கலப்பை எடுத்து கன எருதை
முன்னடத்திப்

பஞ்சம் தலைகாட்டப் பாமரப்
படைமன்னர்,
நெஞ்சம் அயராமல் நிலத்தை
உழுதிடுவார்,

கோத்துநெல் முற்றித் தலைசாய்ந்த
கோலத்தை
மாற்றியடித்து மறுகோலம் செய்த
நெல்லைத்
தூற்றிக் குவித்துத் துறைதோறும்
பொன்மலைகள்