பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

பாரதிதாசன்


கோலம் புரியும் குளிர்நாடும்
உன்னதுவே!
ஞாலம்புகழும் நகைமுகத்தோய்
கண்ணுறங்கு!

செம்புழுக்கல் பாலோடு பொங்கச்
செழுந்தமிழர்
கொம்புத்தேன் செய்து குளிர்முகக்
கனிச்சுளையோடு

அள்ளூற அள்ளி முழங்கையார்
நெய்யொழுக
உள்ளநாள் உண்ணும் உயர்நாடும்
உன்னதுவே!

கோட்டுப்பூ நல்ல கொடிப்பூ
நிலநீர்ப்பூ
நாட்டத்து வண்டெல்லாம் நல்லஇசை
பாய்ச்சக்
கொத்தும் மரங்கொத்தி தாளங்
குறித்துவரத்

தத்துபுனல் தாவிக் கரையில்
முழாமுழக்க

மின்னும் பசுமை விரிதழைப்பூம்
பந்தலிலே
பன்னும் படம்விரித்துப் பச்சைமயி
லாடுவதும்,