பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88
பாரதிதாசன்
 

மின்காய்த்த வண்ணம் மிகுமணிக
ளோடுபசும்
பொன்காய்த்த பூங்கொடியா ரோடுதம்
காதலர்கள்.

எண்ண மொன்றாகியே இல்லறத்
தேர்தன்னைக்
கண்ணுங் கருத்தும் கவருமோர்
அன்புநகர்.

ஆரும்நிகர் யார்க்கும் அனைத்தும்
சரியங்கென்று
ஓரும்நகர், நோக்கி ஓடுந்தமிழ்
நாடு

நின்நாடு! செல்வம் நிறைநாடு
கண்ணுறங்கு
பொன்னான தொட்டிலில்
இப்போது!

இசையமுது-1