பக்கம்:பாரதித் தமிழ்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


என்னே கொருமை!

4 ஏப்ரல் 1906 விகவாவசு பங்குனி 22

பூர்வ காலத்தில் அர்ஜுனதிகள் செய்ததாகப் புராணங்களிலே கூறப்படும் அம்புத் தொழில் முறை களைப் பின்பற்றி இரண்டு ரஜபுத்திரர்கள் செய்த அற்புதமான துப்பாக்கி வித்தைகளை நோக்கும் போது உள்ளத்திலெழுந்த சில எண்ணங்கள்.

மல்லார் திண்டோட் பாஞ்சாலன்

மகள் பொற்கரத்தின் மாலுற்ற வில்லால் விஜயன் அன்றிழைத்த

விந்தைத்தொழிலை மறந்திலிரால் பொல்லா விதியால் நீவிரவன்

போர்முன்னிழைத்த பெருந்தொழில்கள் எல்லா மறந்தி ரெம்மவர்காள்

என்னே கொடுமை யீங்கிதுவே! I

வீமன் திறலு மவற்கிளேய

விஜயன் திறலும் விளங்கிநின்ற சேமமணிப்பூந் தடநாட்டில்

சிறிய புழுக்கள் தோன்றி வெறுங் காம நுகர்தல் இரந்துண்ணல்

கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர் ஈமம் புகுதலிவைபுரிவார்

என்ன கொடுமை யீங்கிதுவே! 2

-சி. சுப்ரமணிய பாரதி