பக்கம்:பாரதித் தமிழ்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது தாய் நாட்டின் முன்னட் பெருமையும் இந்நாட் சிறுமையும்

11 ஏப்ரல் 1906 விகவாவசு பங்குனி 29

கண்ணிகள்

புன்னகையு மின்னிசையு மெங்கொளித்துப் போயின இன்னலொடு கண்ணி ரிருப்பாகி விட்டனவே! (வோ ஆணெலாம் பெண்ணுய் அரிவையரெலாம் விலங்காய் மாணெலாம் பாழாகி மங்கிவிட்டதிந் நாடே! ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநா டென்பதுபோய்ப் பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே வீமாதி வீரர் விளிந்தெங்கு போயினரோ! ஏமாறி நிற்கு மிழிஞர்களிங் குள்ளாரே! வேதவுப நிடத மெய்ந்நூல்க ளெல்லாம்போய் பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே! ஆதி மறைக்கீதம் அரிவையர்கள் சொன்னதுபோய் வீதி பெருக்கும் விலையடிமை யாயினரே! செந்தேனும் பாலும் தெவிட்டி நின்ற நாட்டினிலே வந்தே தீப்பஞ்ச மரபாகி விட்டதுவே!