பக்கம்:பாரதித் தமிழ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்வாமி அபேதானந்தர்


21 ஜூலை 1906

(இந்தியா பத்திரிகைக் கட்டுரை)

  இந்த வாரத்தில் சென்னையிலே நடந்த சமாசாரங்களுக்குள் வெகு முக்கியமானது ஸ்வாமி அபேதானந்தரின் வரவேயாகும். பாரத நாட்டு மகரிஷிகளில் ஒருவரும் ஜகத் பிரசித்தருமாகிய ஸ்வாமி விவேகாநந்த பரம ஹம்ஸரது ஸகபாடியும் ஸ்ரீமத் ராமகிருஷ்ண பரப்ரஹ்மத்தின் சிஷ்யருமான அபேதாநந்தர் பல வருஷ காலமாக ஐரோப்பா, அமெரிக்கா முதலிய இடங்களில் மண்ணாசையிலும் பொன்னாசையிலும் அமிழ்ந்து கிடக்கும் மனிதர்களிடம் வேதாந்த மார்க்கம் உபதேசித்து அவர்களுடைய இரும்பு நெஞ்சுகூட ஞானத் தீயில் இளகுமாறு செய்வித்துப் பெருங்கீர்த்தி பெற்றுவிட்டு, இப்போது தமது தாய் நாட்டிற்கு மீண்டு வந்திருக்கிறார்.
 இவருக்குச் சென்னையிலே நடந்த உபசரணைகளையும், இவர் சென்னையிலே செய்த உபந்நியாசக் கருத்துக்களையும பற்றி மற்றாேரிடத்திலே பிரஸ்தாபம் செய்திருக்கிறோம். இவரும் இவரது கூட்டாளிகளும் கடல்மீது எத்தனையோ ஆயிரம் காதம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/106&oldid=1539773" இலிருந்து மீள்விக்கப்பட்டது