பக்கம்:பாரதித் தமிழ்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பார்தி தமிழ்

வந்தார். அதன் தொந்தரவு பொறுக்க முடியாமல் அவர் வெளி நாடுகளிலேயே இருக்க விரும்பினர். முதல் உலக யுத்தத்தின்போது அவர் எத்தனையோ இன்னல்களுக்கிடை யில் மனம் சோராமல் அமெரிக்காவில் காலம் தள்ளினர். இந்தியாவுக்காக அவ்விடத்திலும் சேவை செய்வதையே அவர் நோக்கமாகக் கொண்டார். கடைசியில் பிரிட்டிஷ் ஆட்சியாளர் அனுமதி தந்ததன் பிறகு லஜபதி 1920 பிப்ரவரி 20-ஆம் தேதி இந்தியா திரும்பினர். அதே ஆண்டு செப்டம்பரில் கல்கத்தாவில் நடந்த விசேஷ காங்கிரசுக்கு அவர் தலைமை வகித்தார்.

லஜபதிக்குக் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத் இல் அவ்வளவு பற்றுதல் இல்லை. இருந்தாலும் அடிகள் போர் தொடங்கியவுடன் அதில் முக்கிய பங்கு கொள்ள அவர் தயங்கியதில்லை. இப் போரின் காரணமாக அவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. சிறையிலே அவருக்குக் காச நோய் பற்றியது.

சைமன் கமிஷன் 1927-ல் ஏற்பட்டதும், அதைப் பகிஷ்கரிப்பதெனக் காங்கிரசு முடிவு செய்தது. 1928 அக்டோபர் 30-ஆந் தேதி இக் கமிஷன் லாகூருக்கு வந்த போது அதை வரவேற்கப் பொதுமக்கள் யாருமே இல்லை. ‘சைமனே திரும்பிப் போ’ என்று முழங்கவும், கறுப்புக் கொடி பிடிக்கவுமே அவர்கள் பல்லாயிரக் க்ணக்கில் திரண்டார்கள். பஞ்சாப் சிங்கம் காந்தியடிகளின் சாந்த மொழியைக் கடைப் பிடித்து அமைதியாய்க் கூட்டத்தின் முன்னணியிலே காட்சி அளித்தார். போசலீார் தடிகொண்டு தாக்கத் தொடங்கினர். அந்தச் சிங்கத்தையும் அடித்தார்கள். போலீஸ் சூபரின்டென்டெண்டு ஸ்காட் இரண்டு அடி அடித்தான். மேலும் எங்கிருந்தோ இரண்டடி ஒன்று நெஞ்சின் மேலே. அந்த அடிக்ளின் காரணமாகவே அவர் அகால மரணமடைந்தார். போலீஸ் தடிகொண்டு தாக்கிய போது அவர் வீராவேசத்துடன், ‘தேச்த் தொண்டர்களே அடிக்கும். ஒவ்வொரு அடியும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சவப் பெட்டியை முடுவதற்கு அடிக்கப் படும் ஒர் ஆணியாகும்’ என்று முழங்கினர்.