பக்கம்:பாரதித் தமிழ்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லிக்கேணி சுதேசிய கிருஹறியம்

17 டிசம்பர் 1907 பிலவங்க மார்கழி 2

சூரத்தில் நடக்கிற காங்கிரசுக்கு நாங்கள் எல் லோரும் இவ்விடமிருந்து நாளது டிசம்பர் மாதம் 20-ஆந் தேதி வெள்ளிக் கிழமை மாலையில் ரிசர்வ் வண்டிகள் மூலமாய்ச் செல்லுகிறபடியால் இந்த ராஜதானியிலிருந்து காங்கிரசுக்குச் செல்லும் பிரதி 劉 (டெலிகேட்ஸ்)களும் பார்ப்பவர்களும் (விசிட் டர்ஸ்) இது பார்த்தவுடன் அவர்கள் புறப்படும் விவ ரத்தைத் திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெரு 87-வது நம்பர் சுதேசிய கிருஹத் தாருக்குத் தெரிவிக்கும்படிக்கும் நாளது மாதம் 20-ஆம் தேதி காலையில் மேற்படி கிருஹத்திற்கு

வந்து சேரும்படிக்கும் கேட்டுக்கொள்ளுகிருேம்.

சி. சுப்பிரமணிய பாரதி