பக்கம்:பாரதித் தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் காஷனலிஸ்டு டெலிகேட்டுகளுக்கு கோட்டீஸ் 123

என அறியலாம். தேச விடுதலைப் போரிலே சூரத் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க ஒரு கட்டம். காங்கிரசிற்குள்ளேயே மித வாதிகள் என்றும் தேசீய வாதிகள் என்றும் இரண்டு கட்சிக் காரர்கள் தோன்றினர் . மிதவாதிகள் பழைய விண்ணப்ப முறை, வேண்டுகோள் முறையையே பின்பற்ற விரும்பினர் கள். இவர்களேத்தான் பாரதியார் பழைய கட்சியார் என்று அழைக்கிரு.ர். இவர்களுக்குக் கோகலே போன்றாேர் தலைவர் கள். தேசீயவாதிகள் தீவிரமான கொள்கைகளை அனுசரிக்க வேண்டுமென்று விரும்பியவர்கள். இவர்களுக்கு லோகமான்ய பாலகங்காதர திலகர் தலைவர். 1896 முதற்கொண்டே அவர் காங்கிரசில் கண்டிப்பான முறைகளைப் புகுத்த முயன்று வந்தார். 190 -ல் நடந்த கல்கத்தா காங்கிரசிலேயே மிதவாதி களுக்கும் தேசீயவாதிகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகத் தோன்றலாயின. ஆனல் அதில் தலைமை வகித்த தாதா பாய் நெளரோஜியின் திறமையால் அவை ஒருவாறு சமாளிக்கப்பட்டன. 1907-ல் இவ்வேறுபாடுகள் இன்னும் வலுவடையவே நாகபுரியில் நடைபெறவேண்டிய காங்கிரசை மிதவாதிகள் சூரத்திற்கு மாறினர். சூரத்திற்கு மாற்றுவதால் தங்கள் விருப்பம்போல் காரியங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என்று மிதவாதிகள் கருதியிருப்ப தாகத் தேசீயவாதிகள் அவர்கள்மேல் குற்றம் சாட்டினர்.

ஆல்ை 1907 டிசம்பர் 27-ந் தேதி தொடங்கிய சூரத் காங்கிரசில் மிதவாதிகளின் விருப்பம்போல் எல்லாம் நடை பெறவில்லை. ராஷ்பிகாரிகோஷைத் தலைவராகப் பிரேரேபண செய்தது முதல் காங்கிரசில் ஒரே குழப்பம்தான். அதனல் மேற்கொண்டு அன்று ஒன்றும் செய்ய முடியாமல் அடுத்த நாள்வரை நடவடிக்கைகளைத் தள்ளி வைத்தார்கள். அடுத்த நாள் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. தலைவர் அனுமதி கொடுக்காவிட்டாலும் தமக்குப் பேச உரிமையுண் டென்று திலகர் மேடைமீதேறிஞர். கூச்சலும் குழப்பமும் ஓங்கின. மிதவாதிகளின் த ல வ ர் க ளி ல் ஒருவரான சுரேந்திரநாத் பானர்ஜியை நோக்கி யாரோ செருப்பை சிர்ைகள், நாற்காலிகள் தாராளமாகப் பறந்தன. தடி யெடுத்தார்கள் சிலர். இவ்வாறு அன்றும் காங்கிரசு கலகத்தில் முடிவாயிற்று.

தேசபக்டு உணர்ச்சி மிருந்த பாரதியாரின் உள்ளப் போக் ை இந்தக் காங்கிரசு மிகவும் மாறுதலடையச் செய் திருக்க வேண்டும். திலசரின் தரிசனமும், அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/122&oldid=605376" இலிருந்து மீள்விக்கப்பட்டது