பக்கம்:பாரதித் தமிழ்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


124 பாரதி தமிழ்

வீரக்கனலும் நமது கவிஞரை முற்றிலும் கவர்ந்து விட்டன என்று துணிந்து கூறலாம். விபின் சந்திர பாலரின் வீரா வேசப் பேச்சுகளும்பாரதியாரை ஒரு தேசீய கவியாக மாற்ற உதவியிருக்கின்றன.

‘ஸ்வராஜயம் எனது பிறப்புரிமை : நான் அதைப் பெற்றே தீருவேன்’ என்று கர்ஜனை செய்த திலகரிடம் பாரதியாருக்கிருந்த மிகுந்த பக்தியை அவர் இயற்றிய வாழ்க திலகன் நாமம், லோகமான் ய பால கங்கார திலகர் என்ற இரு பாடல்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். பின்னைய பாட்டு திரு. எம். வி. ஈஸ்வர ஐயர் 1908-இல் வெளியிட்ட பூ திலகரின் ஜீவிய சரிதம் என்ற நூலில் வந்தது.

மேலும், மிதவாதிகளின் கொள்கை பாரதியாருக்குச் சம்மதமில்லை என்பதை கோக்கலே ச: மியார் பாடல், மேத்தா திலகருக்குச் சொல்லுவது, தி காண கட்சியார் சுதேசியத்தைப் பழிக்கல் முதலிய பாடல்களிலிருந்து தெரியலாம்.