பக்கம்:பாரதித் தமிழ்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்வதேச கீதங்கள்

இத்தலைப்புடன் வெளி வந்த நூலே பாரதி யாரின் முதல் நூலாகக் கொள்ளலாம். பலரும் எழுதிய தேசபக்திப் பாடல்களைத் தொகுத்து வெளி யிட விரும்பி, அது குறித்து, 13-2-1906.இல் சுதேச மித்திரனில் விண்ணப்பம் விடுத்து அநேகமாக ஏமாற்றமடைந்த பாரதியார் தாமே இயற்றிய சிறந் தேசபக்திப் பாடல்கள் அடங்கிய இந்நூலை 1908-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியிட்டிருக் கிறார். இந்நூலின் முகவுரை பாரதியாரால் 10 ஜனவரி 1908-ல் எழுதப் பெற்றிருக்கிறது. இது பற்றி முதல் விளம்பரம் 21-1-1908-ல் மித்திரனில் வெளி வந்ததிலிருந்து இப் பாடல்களெல்லாம் 1907-லும் அதற்கு முன்பும் எழுதப்பட்டவை என்று தெரியலாம். இந்நூலின் விலை இரண்டனவாக இருந்தது.

இந்நூலில் இடம் பெற்றிருந்த பாடல்

1. வந்தே மாதரம் 2. வந்தே மாதரம் 3. நாட்டு வணக்கம் 4. எங்கள் நாடு 5. நடிப்புச் சுதேசிகள் 6. தொண்டு செய்யும் அடிமை