பக்கம்:பாரதித் தமிழ்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான ரதம்

தமிழுக்கே புதிதான ஒர் அழகிய உரைநடை பி. மிக அற்புதமாக இந்நூலைப் பாரதியார் 1910 ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிரும். இதற்கு எழுதிய முகவுரையில் புதுச்சேரி, லெளம்ய, தை, 15 (1910 ஜனவரி 28) என்று தேதி குறிக்கப்பட்டுள்ளது. இந் நூலைப் பற்றி திரு. எஸ். ஜி. இராமாஜலு நாயுடு சென்றுபோன நாட்கள் என்ற கட்டுரையில் கூறுவ தாவது: “ஞான தம் என்ற தலைப் பெயருடன் தமிழ் நாடு என்றும் கண்டிராத துள்ளிக் குதிக்கும் ஒரு புதிய கந்தர்வ நடையில் இயற்கையின் அழகுகளைப் பற்றியும், தேசச் செய்திகளைப் பற்றியும், நெருங்கிய நண்பர்களின் மன மாறுபாடுகளைப் பற்றியும் அற் புதமான கற்பனையுடன் வாரந்தோறும் இந்தியாவில் எழுதி வந்தார். அவற்றை ஒருங்கு சேர்த்து ஞானா தம் என்று புத்தகமாக வெளியிட்டார். அதற்கு இணையான நூல் தமிழ் மொழியில் இல்லை. சொற் சுவை பொருட் சுவை நிரம்பியது. பாச்சுவை பரவிய நடையால் அமைந்தது.”

இந்நூல் சென்னையிலே தொடங்கப் பெற்றிருக் கிறது. திருவல்லிக்கேணியிலே வீரராகவ முதலி தெருவில் ஒரு மாலை நேரத்தில் பாரதியார் சிரம பரிகாரத்தின் பொருட்டு ஒரு மஞ்சத்தில் படுத் திருப்பதாக நூலின் பீடிகை தொடங்குகிறது. ஞான