பக்கம்:பாரதித் தமிழ்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14

வாழ்க்கையையும், கவிதைத் திறனையும் மிக விரிவாக ராய்ந்து அதில் எழுதியிருந்தது. கீட்ஸின் தலைமுடியின் 麗 தங்க நிறமானதா செம்பட்டையானதா என்பதைப் பற்றிக்கூட அதில் விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டிருந்தது. அவரைப்பற்றி என்னென்ன தெரிந்து கூற முடியுமோ அத்தனையும் அந்த நூலிலே இருந்தது. அதைப்போலப் பாரதியாருக் கொரு வாழ்க்கை வரலாறும், இலக்கிய ஆராய்ச்சியும் செய்து இவற்றை வெளியிட வேண்டுமென்று நான் கனவு கண்டுகொண்டிருந்தேன். அவருடைய வாழ்க் கையைப்பற்றிப் பல விஷயங்களைத் திரட்ட வேண்டு மென்றும் திட்டமிட்டிருந்தேன்.

ஆனல் இதுவரை அவ்வளவு விரிவான ஆராய்ச்சி செய்ய ஒழிவு கிடைக்கவில்லை. இடையிடையே முயன்றும் காலக் குறைவால் பெரியதோர்.அளவிற்கு ஒன்றும் சாதிக்க முடிய வில்லை. கையால் இனிமேலும் ஒழிவுக்காகக் காத்திருந்து பாரதியாரின் இலக்கியத்தை மறைத்து வைத்திருப்பது சரியல்லவென்று எனக்குத் தோன்றியது. ஆகவே பாரதி யாரைப்பற்றிப் புதிதாக இதுவரை தெரிந்த விவரங்களையும், வெளிவராத அவருடைய கவிதை, கதை, கட்டுரை, மற்றக் குறிப்புகளையும் வெளியிட்டு விடுவதென்ற தீர்மானத்திற்கு வந்தேன்.

இவ்வாறு வெளியிடுவதற்கும் பாரதியாரைப் பற்றிய ஆராய்ச்சியில் முன்னர் வெளிவந்துள்ள நூல்களிலிருந்து மேற்கோள் குறிப்புகள் எடுத்துக்கொள்வதற்கும் அன்புடன் அனுமதி தந்த் சுதேசமித்திரன் ஆசிரியர் திரு. சி. ஆர். னிவாசன் அவர்களுக்கும். சென்னை அரசாங்கத்திற்கும், ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரி வித்துக்கொள்ளுகிறேன்.

இந்த நூலிலே பாரதியாரின் கவிதை, கதை, கட்டுரை முதலியவ்ற்றை அவை வெளிவந்த தேதிக் கிரம்ப்படி வெளி யிட்டிருக்கிறேன். முன்பே நூல் வடிவில் வெளியான கட்டுரையாளுல் அது சுதேசமித்திரனில் வெளியான தேதி தெரிந்திருந்தால் அதை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். பாரதியார் எழுதியதாக அவர் பெயரில் சில கட்டுரைகள் அண்மைக் கர்ல்த்தில் சில பத்திரிகைகளில் வெளிவந் துள்ளதை நான் பார்த்திருக்கிறேன். ஆளுல் அவை பாரதி யாருடைய கட்டுரைகள்தாமா என்பதற்கு எனக்கு நிச்சய