பக்கம்:பாரதித் தமிழ்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை 139

பெற்றுவிட்டால் ஏழைகள் என்ன செய்வார்? திரு நெல்வேலி ஜில்லாவிலே ஒரு கிராமத்திலே ஒரு பெண்ணுக்கு விவாகம் நடந்தபோது அவளுடைய பெற்றாேர் மாப்பிள்ளைக்குப் பணம் கொடுத்தார் கள். பிறகு ருதுசாந்தியின்போது அந்த மாப் பிள்ளை, ஐந்நூறு ரூபாய் கொடுத்தால்தான் ருது சாந்தி செய்து கொள்ளுவேன். இல்லாவிட்டால் பெண் உங்கள் வீட்டோடே இருக்கட்டும்” என்று சொல்லி ஐந்நூறு ரூபாய் தண்டம் வாங்கிக்கொண் f一f了、T。

வெளியாகாத பருதி:

இதுபோலவே சீமந்தந்துக்கும் கிரயம் வாங்கிக் கொண்டான். பிறகு அந்தப் பெண்ணே விலக்கி வைத்துவிட்டு வேறொரு பெண்ணே விவாகம் செய்துகொண்டு புது மாமனுரிடத்திலும் முன்னைப் போலவே ‘பனை வசூல்கள்’ செய்து வருகிருன். பணம் கொடுக்க வழியில்லாத குடும்பத்தாரும் அவர்களைப் பார்த்துப் பரிதவிக்கும் சிலரும், இந்த விஷயத்தில் ஏதேனும் சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று விரும்புகிரு.ர்கள். கலயாணமாகாமல் காலேஜிகளில் படிக்கும் பிரமசாரிப் பிள்ளைகள் தமக்குள் சபை கூடி இனிமேல் மாமனுரிடம் தண்டம் வாங்குவ தில்லை என்று பிரதிக்கினை செய்துகொள்ள வேண்டு மென்று சிலர் சொல்லுகிரு.ர்கள். பிள்ளையின் தகப்பனன்றாே பணம் வாங்குகிருன்? அதற்குப் பிள்ளை சபதம் செய்துகொண்டால் என்ன பிரயோ ஜனம்: நியாயத்திலேகூடத் தகப்பன் வார்த்தையை மீறி நடக்கும் பிள்ளைகள் தமது நாட்டிலே பலரில்லை. இதுவெல் லாம் வீண் வார்த்தை. பெண்களுக்கு விடுதலை யுண்டால்ை ஒழிய விவாக சம்பந்தமான ஆயிரத்தெட்டு உளழல்கள் நீங்க வழி யில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/138&oldid=605399" இலிருந்து மீள்விக்கப்பட்டது