பக்கம்:பாரதித் தமிழ்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


142 பாரதி தமிழ்

போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆல்ை புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம்-தமிழில் ஏ றி க் .ெ கா ன் டே போக வேண்டும்.

峰 奪 参见

தம்பி-நான் ஏது செய்வேனடா: தமிழைவிட மற்றாெரு பாவுை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு ஒருத்தமுண்டாகிறது. தமிழனவிட மற்றாெரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லே. தமிழச்ெ யைக் காட்டிலும் மற்றாெரு ஜாதிக்காரி அமுகாயிருப் பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.

தம்பி-உள்ளமே உலகம்.

ஏறு! ஏறு! ஏறு! மேலே, மேலே, மேலே! நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங் காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.

உனக்குச் சிறகுகள் தோன்றுக, பறந்து போ. பற! பற! மேலே, மேலே, மேலே.

  • 參 *

தம்பி-தமிழ்நாடு வாழ்க என்றெழுது, தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது. தமிழ் நாட் டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.

அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீனகலைகளெல்லாம் பயிற்சிபெற்று வளர்க என்றெழுது. தமிழ் நாட்டில் ஒரே ஜாதிதான் உண்டு. அதன் பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது. ஆணும் பெண்ணும்-ஒருயிரில் இரண்டு கலேகள் என்றெழுது.