பக்கம்:பாரதித் தமிழ்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கெல்லேயப்பருக்குக் கடிதம் 143

ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது. பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.

பெண்ணே அடைத்தவன் கண்ணை அடைத்தவன் என்றெழுது.

தொழில்கள், தொழில்கள் தொழில்கள் என்று க !ெ.

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பவன் மேற்குலத்தான் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக. முயற்கென் ஒங்குக. ஸங்கிதம், சிற்பம், யந்திரநூல், பூமிநூல், வானதால், இயற்கை நூலின் ஆயிரம் கிளேகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று (ՄԻԱՐՈ,16.

சக்தி, சக்தி, சக்தி என்று பாடு.

தம்பி-நீ வாழ்க.

_

உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே “ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாஸ்த்துக்கு நாட்டுப் பாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்ரிகையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப் பெண்’ என்றாெரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவருமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங் கேனும், எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி-உனக் கேனடா இது கடமையென்று தோன்றவில்லை? நீ

வாழ்க.

உனதன்புள்ள,

பாரதி.