பக்கம்:பாரதித் தமிழ்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


146 பாரதி தமிழ்

அதிகாரம் செலுத்த வருமுன்பாகவே அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கு நம்மால் இயன்ற அளவு பாடுபட வேண்டும்.’’ பள்ளிக்கூடம் என்ற வார்த்தை எடுத்ததிலிருந்து ஆஸ்திரேலியா தேசத் துப் பெண் பள்ளிக்கூடம் ஒன்றைப் பற்றிய கதை ஞாபகத்துக்கு வருகிறது. அதில் வாசித்துக் கொண் டிருந்த ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணே இன்ஸ்பெக் டர் வந்து பரீகை நடத்தியபோது பின்வரும் கேள்வி கேட்டாராம்:

இந்தியா தேசத்து ஜனங்களின் சாதாரண போஜனம் எது?

அந்தப் பெண் சொல்லிய மறுமொழி:"பஞ்சம்.” வேடிக்கையான கதை.

கல்வி சம்பந்தமாக இன்னுமொரு மேற்கோள்: இன்று கிச்சடியே மேற்கோள் கிச்சடி'தானே? மிஸ்டர் ஆர்ச்செர் என்ற ஒரு ஆங்கிலேயர் சில தினங்களின் முன்பு லண்டன் பத்திரிகை யொன்றில் கல்வியைப் பற்றி எழுதிக்கொண்டு வரும்போது, “இங்கிலாந்திலே இப்போது கல்விக்கு மூலாதார மாக வசன காவியங்களையும், செய்யுட் காவியங் களையும், வைத்திருப்பது சரியில்லை. ஸயன்ஸ் (இயற்கை நூல்) படிப்புத்தான் மூலாதாரமாக நிற்கவேண்டும்’ என்கிரு.ர்.

இவருடைய கொள்கை பலவித ஆக்ஷேபங் களுக்கிடமானது. ஆனால், தனிப் பள்ளிக்கூடங்கள் எந்த முறைமையை அனுசரித்த போதிலும், ராஜாங்கப் பள்ளிக்கூடத்தார். இவருடைய கொள் கையைத் தழுவியே படிப்பு நடத்த வேண்டுமென்று நான் நினைக்கிறேன். கற்பனையும் அலங்காரமும் எனக்குக்கூட மிகவும் பிரியந்தான். ஆனால், ‘நெல் எப்படி விளைகிறது?’ என்பதைக் கற்றுக் கொடுக்