பக்கம்:பாரதித் தமிழ்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கிச்சடி 147

காமல், ‘அன்மொழித் தொகையாவது யாது? என்று படிப்புச் சொல்லிக் கொடுப்பதை நினைக்கும் போது கொஞ்சம் சிரிப்புண்டாகிறது. அன்மொழித் தொகை சிலரைக் காப்பாற்றும், ஊர் முழுதையும் காப்பாற்றாது. நெல்லுத்தான் ஊர் முழுதையும் காப்பாற்றும். அன்மொழித் தொகையைத் தள்ளி விட வேண்டுமென்று நான் சொல்லவில்லே. ஆல்ை அன்மொழித் தொகையைப் பயிர் செய்து நெல்லே மறந்துவிடுவது சரியான படிப்பில்லை யென்று சொல்லுகிறேன். அவ்வளவுதான்.