பக்கம்:பாரதித் தமிழ்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஜப்பான் தொழிற் கல்வி

சக்திதாஸன்

12 பிப்ரவரி 19 1 ே ாகவு. தை 30 சக்தி வேண்டும்

தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் சக்தியுண்டாகும். தெளிந்த அறிவென் பது இரண்டு வகைப்படும்-ஆத்ம ஞானம் லெளகிக ஞானம் என.. ஆத்ம ஞானத்தில் நமது ஜாதி சிறந் த்து. லெளகிக ஞானத்தில் நம்மைக் காட்டி லும் வேறு பல தேசத்தார் மேன்மை யடைந்திருக் கிறார்கள். அப்படிப்பட்ட தேசங்களில் ஜப்பான் ஒன்று. புத்தகங்களாலும், பத்திரிகைகளாலும், யாத்திரைகளாலும் நாம் ஜப்பான் விஷயங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளுதல் பயன்படும். கூடிய வர்ை பிள்ளைகளை ஜப்பானுக்கு அனுப்பிப் பலவித மான தொழில்களும் சாஸ்திரங்களும் கற்றுக் கொண்டு வரும்படி செய்வதே பிரதான உபாய மாகும். தொழிற் கல்வியிலும் லெளகிக சாஸ்திரப் பயிற்சியிலும் நாம் மற்ற ஜாதியாருக்கு ஸமான மாக் முயலுதல் அவசரத்திலும் அவசரம்.

தஞ்சாவூர் ஜில்லாவிலிருந்து ஒரு தமிழ் வாலிபர் சில வருஷங்களாக ஜப்பானிலே போய் நூல் நூற்றல், துணி நெய்தல், சாய மேற்றுதல்