பக்கம்:பாரதித் தமிழ்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பான் தொழிற் கல்வி 149

முதலிய தொழில்கள் படித்துக் கொண்டிருக்கிரு.ர். இங்கிருந்து புறப்படு முன்பாக அந்தப் பிள்ளை வெகு சாதாரணராக இருந்தார். அங்கே போய் மூன்று, நான்கு வருஷங்கள் வாசம் செய்ததி லிருந்து அவருக்கு ஏற்பட்டிருக்கும் அறிவுப் பயிற்சி, ஊக்கம், தைரியம், ஸ்வஜனுபிமானம் முதலிய குணங்கள் வியக்கும்படியாக இருக்கின்றன. திருஷ் டாந்தமாக, சில தினங்களின் முன்பு அவர் இங் குள்ள தமது தமையனருக்கு ஒரு கடிதம் எழுதியிருந் தார். அந்தக் கடிதம் எனக்கு வாசித்துக் காட்டப் பட்டது. மிகவும் ரஸ்மாக யிருந்தபடியால் அதன் ஸ்ாராம்சங்களை இந்தப் பத்திரிகை படிப்பவருக்குத் தெரிவிக்கிறேன்.

ஜப்பானில் தொழிற் கல்வி பழகும் ஒரு தமிழ் வாலிபர் தம்முடைய தமையனருக்கு எழுதிய கடிதத் தின் ஸ்ாராம்சங்கள்:

அண்ணுவுக்கு நமஸ்காரம் :

சாயத் தொழில் விஷயமாக ஏற்கெனவே கேட்ட பாடங்களை அனுபவத்தில் சோதனை செய்து வரு கிருேம். மிகவும் துரிதமாக வேலை நடந்து வரு கிறது. சாயமருந்துகள், மாதிரித் துணிகள் முதலிய சாமான்களெல்லாம் போதுமான அளவு சேகரஞ் செய்துவிட்டேன். ஆனல் இன்னும் செய்யவேண்டிய காரியம் எவ்வளவோ இருக்கிறது. துணி சம்பந்த மான பரிபூரண ஞானம் ஏற்பட வேண்டுமானல், சாயம், (துணியில்) அச்சடித்தல், இரண்டிலும் இன்னும் பல பல சோதனைகள் செய்து பார்க்க வேண்டும். ராஜாங்க சர்வகலா சங்கத்து விவசாயக் கலாசாலையில் போய்ப் பட்டுப் பூச்சி வளர்க்கும் தொழில் படிக்கவேண்டும். டோக்கியோ (ஜப்பான் ராஜதானி) நகரத்திலும், பக்கங்களிலும் உள்ள