பக்கம்:பாரதித் தமிழ்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஜப்பான் தொழிற் கல்வி 151

வேண்டுமென்றாலும்-துணிகள் செய்து கொள்ள லாம். ஒரு வருஷத்துப் பழக்கத்திலே தொழிலாளி களுக்குப் போதுமான தேர்ச்சியுண்டாய்விடும். இரண்டாவது அல்லது மூன்றாவது வருஷத்தில் சக்தி யந்திரம் (பவர்) உபயோகப்படுத்திக் கொள்ள லாம். ஜப்பானில் வந்து நெசவுத் தொழில் படிக்கும் ஹிந்து வாலிபர்கள் எங்களுடைய ராஜாங் கத் தொழிற்சாலையைப் பார்வையிட்டு வருவதுடன் சாதாரணத் தொழிற்சாலை யொன்றில் சேர்ந்து ஒரு வருஷம் வேலை செய்து பழகவேண்டும். அப் போதுதான் தங்களுடைய ஆக்கம், பயன், ஆட்சி இவை நன்றாக மனதில் படியும்.

இங்கனம் டிெ ஜப்பானிய சாஸ்திர நெசவுத் தொழில் விஷயமாக மாத்திரமேயன்றி சாயத் தொழில் சம்பந்தமாகவும் எனக்கு நல்ல போதனை கள் சொன்னர். சாயத்தொழில் சொல்லிக் கொடுக் கும் வகுப்புகளிலே அன்னிய தேசத்துப் பிள்ளைகள் வந்து சேர்தல் இன்னும் சிறிது காலத்திற்குள் சிரம மாகிவிடும். ஆகையால் சீக்கிரத்திலேயே பல தமிழ்ப் பிள்ளைகள் இங்கு வந்து மிகப் பயனுள்ளதாகிய இத் தொழில் பழகிக்கொண்டு போகும்படி செய்ய வேண்டும்.

இத் தொழில்களில் ஏதேனும் ஒரு சாகையிலே மட்டும் விசேஷ பாண்டித்யம் ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன். நான் இருக்கும் இடத்திற்கும் பள்ளிக்கூடத்துக்கும் 2 மைல் தூரம் இருக்கிறது. நடந்துதான் போகிறேன். வண்டியேறுவதில்லை. இடைப்பகல் ஆஹாரம் கையிலேயே கொண்டுபோய் விடுகிறேன். சந்தோஷத்தோடுதான் இருக்கிறேன். என்னைப்பற்றிக் குடும்பத்தாருக்கு எவ்விதமான கவலையும் வேண்டியதில்லை.