பக்கம்:பாரதித் தமிழ்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 பாரதி தமிழ்

பிறந்த நாடு

நமது ஜாதியாருக்கும் தேசத்தாருக்கும் என் ஞலே ஆனவரை ஊழியம் செய்ய வேண்டுமென்று விரதம் கொண்டிருக்கிறேன். செட்டுக் குடித்தனம், ஆனல் திருந்திய ஜீவனம் நமது ஜனங்களுக்கு அவசிய மென்று நினேக்கிறேன். நல்ல காற்று. நல்ல நீர், சுத்தமான, பயனுடைய ருசியான தகுந்த அளவுள்ள ஆஹாரம், சுத்தமான உடை இவையெல்லாம் திருந்திய ஜீவனத்திற்கு லக்ஷணங்கள். இதற்கெல் லாம் படிப்பு அவசியம்.... ... சோறில்லாமல் சோர்ந்து கிடக்கும் ஜனக் கூட்டத்தாருக்கு தர்மோபதேசங் கள் பண்ணுவதிலே எனக்கு ஸந்தோஷமில்லை. அது பாவமென்பதை நான் அறிவேன். ஆனலும் என்ன செய்வது? மனதிலிருப்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்? ஜனகோடிகள் படித்தாலொழிய நாக ரிகப்படுவதற்கு வேறு வழியில்லை. நமது காங்கிரஸ் சபை விஷயத்தில் எனக்கு அஸாஸை கிடையாது. ஆனாலும் அந்த சபையாரிடம் எனக்குச் சிறிது அதிருப்தியுண்டு. அவர்கள் ஒரு சார்பையே கவனித் துக் கொண்டிருக்கிறார்கள். முதலாவது ஆஹாரத் திற்கு வழி தேட வேண்டும். அதிகாரம் வேண்டு மென்று கேட்கிறார்கள். நியாயந்தான். அது கிடைக்கும்வரை பிழைத்திருக்க வேண்டுமே? உண் டாலன்றாே உயிரோடிருக்கலாம்? படிப்பு, கைத் தொழில் இவற்றை காங்கிரஸ் சபையார் போது மானபடி கவனிப்பதாகத் தோன்றவில்லை. நமது ஜனங்களிலே பெரும்பாலோர் ஏழ்மையிலும் அறியா மையிலும் மூழ்கிக் கிடப்பதைக் கல்வியாளர் சும்மா பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாமலிருப்பது மடமையிலும் மடமை. கைத்தொழில் வளர்ச்சிக் காக உழைப்போரும் உண்மையான தேசபக்தரே turrouti.