பக்கம்:பாரதித் தமிழ்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


154 பாரதி தமிழ்

SSAS SSAS SSASAS SS SAAAAAA AAAASASASS

இதுவரை தடுக்க முடியவில்லை. லார்டு ஹார்டிஞ்ச் வைஸ்ராய் வேலையைவிட்டுப் போகுமுன்பு, இந்த “ஒப்பந்தக் கூலி கூடாதென்று சட்டஞ் செய்துவிட வேண்டுமென்பதாக ழ காந்தி மன்றாடுகிரு.ர். நமது தேசத்து மானஸ்தரெல்லோரும் இந்த விஷயத்தில் தத்தமக்கு இயன்றவரை முயற்சி செய்யும்படி வேண்டுகிறேன்.

ருமதி மங்களம்மாள்

சென்னப் பட்டனத்தில் ஹைகோர்ட் ஜட்ஜ் ழ சதாசிவய்யருடைய புத்திரியாகிய விமதி மங்க ளம்மாள் திருவல்லிக்கேணி ஸம்ஸ்கிருதப் பெண் பள்ளிக்கூடத்திலே சில இனங்களின் முன்பு செய்த உபந்நியாலத்தில் தம்மவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

ஹிந்துக்களுடைய நாகரிகத்துக்குத் தலைமைக் களஞ்சியம் ஸம்ஸ்கிருத பாஷையாதலால் நமது நாட்டில் பாண்டித்யம் பெற்று விளங்க வேண்டு மென்ற எண்ணமுடைய எல்லோரும்-பிராமணரும் சூத்திரரும், ஆணும், பெண்ணும்-ஸ்ம்ஸ்கிருத பாஷையில் தேர்ச்சி பெற முயலவேண்டுமென்று ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். பூரீமதி மங்களம்மாளும் அதே கொள்கையையுடையவ ரென்று புலப்படுகிறது.

பிராம்மணர்களிலே ஸ்திரீகளுக்கு வேதமந்திரம் படிக்க அதிகாரம் கிடையாதென்ற வார்த்தையை பூரீமதி மங்களம்மாள் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த வார்த்தை இடைக் காலத்திலேயே ஏற்பட்டது. வேத மந்திரங்களிலேயே பல பெண்களால் எழுதப் பட்டன.

மேலும் விவாகம் செய்யும்போது பெண் னுடைய இஷ்டத்தை மீறிச் செய்வது அநாகரிக