பக்கம்:பாரதித் தமிழ்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ljół) 155

வழக்கமென்பதை இவர் நன்றாக எடுத்துச் சொல்லி யிருக்கிரு.ர். “பெண்களாகிய நாம் ஆப்பிரிக்கா அடிமைகளில்லை. குடும்பத்து எஜமானிகள்’ என்று பூரீ மங்களம்மாள் சொல்லிய ை எங்கள் வீட்டுப் பெண் குழந்தைக்கு வாசித்துக் காட்டினேன். குழந் தைக்கு ஸந்தோவும் பொறுக்க முடியவில்லை. தனக்குத்தெரிந்த வீடுகளுக்கெல்லாம் போப் இந்த வார்த்தையை எல்லோரிடத்திலும் முழங்கி விட்டு :ரவேண்டுமென்று குழந்தை நீர்மானம் செய்திருக் கிறது.

தமிழ்

தமிழ் நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானல், சகல சாஸ்திரங்களும் தமிழ் பாஷை மூலமாகவே கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை நமக்குள்ளே அறிவுடையோரெல் லோரும் கொண்டிருச்கிரு.ர்கள். ஆனல் இதை அனு ஸ்ரனேக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக் குள்ளே சக்தி பிறக்கவில்லை. ஐரோப்பிய ஸ்திரீ யாகிய மிஸ்ஸஸ் பெஸண்ட் கூடச் சில தினங்களின் முன்பு பெங்களூரில் செய்த பிரசங்கமொன்றிலே தமிழ் பாஷையை மிகவும் வியந்து கூறி, நாமெல் லோரும் தமிழ்ப் பயிற்சியில் தக்கபடி சிரத்தை செலுத்தாமல் இருப்பது பற்றி வருத்தப் பட்ட தாகத் தெரிகிறது. இப்படி நம்மைப் பார்த்துப் பிறர் இரக்கப்படும்படியான அவமான நிலை விரை வில் நீங்க வேண்டுமென்று தேவர்களை வணங்கு கிருேம்.

ஒலித் து மகம் மதிய ஒற்றுமை

இந்த விஷயத்தைப் பற்றி ஒங்கோல் என்ற ஊரில் வக்கீல் வேலை பார்க் கும் பூரீ நாராயண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/154&oldid=605425" இலிருந்து மீள்விக்கப்பட்டது