பக்கம்:பாரதித் தமிழ்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய உயிர்

17 urri &= 1 91 6 ராr.0 பங்குனி 5

“இல்வுலகத்தில் மனிதனுக்கு ஏற்படக் கூடிய வலிமைகளை யெல்லாம் நான் எனக்கு உண்டாக்கிக் கொள்வேன். மனிதனுக்கு வசப்படக் கூடிய செல் வங்களையெல்லாம் எனக்கு வசமாக்கிக் கொள்வேன். மனிதனுக்கு விளையக் கூடிய அறிவுகளையெல்லாம் என்னிடம் விளைவித்துக் கொள்வேன். ம னி த னுக்குக் கிடைக்கக் கூடிய இன்பங்களை யெல்லாம் நான் தேடி யனுபவிப்பேன்; ஸ்ர்வ சக்தி பெறு வேன்’

என்று மனத்திலே ஒரு நிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாrமை பெறுவதற்குத் தீராத விருப்பமும் துணிவுமே வழி. வேறுவழியில்லை. ஒருவன் தெய்வ பக்தியுள்ளவகை யிருந்தாலும் அல்லது நாஸ்திககை இருந்தாலும் இந்த வழியை அனுசரிக்கலாம். நாஸ்திகன் அறியக் கடவது யாதெனில்:

இவ்வுலகம் நமது தாய் என்பது.

‘உலகம் என்னிடம் பகைமையுடைய வஸ்து வில்லை. உலக வனத்தில் நான் ஒரு மலர்........ உலகம் என் அறிவுக்கு வசப்படுவதை அனுபவத்திலே கண்டிருக்கிறேன். உலகம் என்னிடம் அ ன் பு பூண்டது”. இந்தச் செய்தியை ஸாமான்ய மதி