பக்கம்:பாரதித் தமிழ்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதிய உயிர் 16]

யுடைய எவனும் தன் உள்ளத்திலே பதியச் செய்து கொள்ளுதல் சிரமமில்லை. உலகம் நமக்குப் பிரதி கூலமாக இருந்தால், இங்கே மூன்று கூடிணங்கள்கூட உயிருடன் வாழ முடியாது: “ஆனல், உலகம் நமக்கு நோய் உண்டாக்குகிறதே. இறுதியில் நம்மைக் கொன்றுவிடுகிறதே, இதை நம்மிடம் அன்பு பூண்ட தாக எங்ஙனம் சொல்லலாம்?’ என்று சிலர் ஆrே பிக்கலாம்.

உலகம் நம்முடைய தாய். அது நமக்குத் துன் பங்கள் விளைவிக்கும்போது நமக்குப் பாடங்கள் கற்றுக் கொடுக்கிறது. மூடக் குழந்தையைத் தாய் அடிப்பது போலவும், கட்டி புறப்பட்ட சதையை ரண வைத்தியன் அறுத்தெறிவது போலவும், உலகம் நம்மைத் துன்பப்படுத்துகிறது. பெருந் துன்ப மடைந்து அதனல் பரிசுத்த நிலை பெற்ற மேதாவி கள் எல்லோரும் இவ்வுண்மையைக் கண்டு கூறி யிருக்கிரு.ர்கள். திருஷ்டாந்தமாக, ஏழைத்தனம் பெரிய துன்பங்களிலே ஒன்றென்பது மனித ஜாதியின் பொது அநுபவம். எனினும் இதைக் குறித்து விக்டர் ஹ்யூகோ என்ற பிரான்ஸ் தேசத்து ஞானியொருவர் பேசும்போது, “வறுமைத்தியிலே ஸ்த்தில்லாத மனிதர் அழிந்து போகிறார்கள். ஸத் துடையவர்கள் பத்தரை மாற்றுத் தங்கம் போல் தேறிச் சுடர் வீசி மாண்பு பெறுகிறார்கள்’ என்று குறிப்பிடுகிரு.ர்.

நோயிலே செத்தவன் போக, அதிலிருந்து நன் ருகத் தேறியெழுந்தவன் அறிவிருந்தால் முன்னைக் காட்டிலும் தான் அதிக சுகநிலையில் இருப்பதை உ ண ர் ந் து கொள்வான். வெளிப்படையாகத் தோன்றும் நோய்க் குறிகள் எல்லாம் உடலுக்குள் இருக்கும் விஷத்தை வெளியேற்றிச் சுகந்தரும் பொருட்டாக இயற்கையால் செய்யப்படும் உபா

பா. த.-11