பக்கம்:பாரதித் தமிழ்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


162 பாரதி தமிழ்

யங்களே யாகுமென்று சிறந்த வைத்தியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஸ்விகூடிம ஞானத்திலே நாட்டமில்லாத ஐரோப் பிய ஸயன்ஸ்'காரர்கூட அடியிலே பூச்சி நிலையி லிருந்து உயிர் மேன்மேலும் படிப்படியாக ஏறி மனித நிலை பெற்றிருப்பதை நோக்கும்போது உயிர்களே மேன்மைப் படுத்த வேண்டும் என்பதே இயற் கையின் உட்கருத்தென்பது தெளிவாகிறதென்று சொல்லுகிரு.ர்கள். ஜந்துக்கள் செய்யும் போராட் டங்களும், அவை படும் துன்பங்களும் அவற்றின் உயர்வுக்காகவே ஏற்படுத்தப் படுகின்றன என் பதையும் அங்கீகாரம் செய்து கொள்கிறார்கள். இங் ங்னம் நம்மை உயர்வு றச் செய்ய வேண்டும் என்ற நோக்கமுடைய இயற்கைக்கு நாமும் அறிவுத் துணி வினலே உதவி புரிவோமானுல், அவ்வுயர்வு விரை விலே கைகூடும்.

வீணுக அஞ்சுவதிலே பயனில்லை. இவ்வுலகம் நம்மிடம் கருண்ையுடையது என்பதை நாஸ்திகரும் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒப்புக் கொண்டால் அவா.களுககு நலலது.

தெய்வ பக்தி யுடையோர்

இனி, தெய்வ பக்தி யிருப்பதாக வாயினலே சொல்லிக் கொண்டு, வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்கு அபிஷேகம் பண்ணி வைப்பவர்களி லேயும் பெரும்பான்மையோர் உண்மையான பக்தி கொண்டவரில்லை. தெய்வ பக் தி உண்மையா பொய்யா என்பதை அறிந்துகொள்ள ஒரு சுலப மான வழியிருக்கிறது. திராத தைரியம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். எதற்கும் அஞ்சாத தைரியமே உண்மையான தெய்வ பக்திக்கு