பக்கம்:பாரதித் தமிழ்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பாரதி தமிழ்

களுக்கு உணவைக் குறைக்கும்படி உபதேசஞ் செய்தல் அவசியமில்லை. உணவு மிகுதியால் நோய்ப் படும் கூட்டத்தார் நமது தேசத்திலில்லை. உணவுக் குறைதான் இங்கே யிருக்கும் ஸங்கடம். ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் என்ற ஆங்கில சாஸ்திரி கல்வியைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார், அதிலே குழந்தை களுக்கு ஊண் மிகுதியால் உண்டாகும் நோய்களைக் காட்டிலும் ஊண் குறைவால் உண்டாகும் நோய் மிகவும் கொடியன என்று சொல்லுகிரு.ர். ஊண் மிகுதிக்கு இயற்கையிலே மாற்றுண்டு. ஊண்குறை வுக்கு மரணந்தான் மாற்று. ‘உண்டவன் உரஞ் செய்வான்.” பரிசுத்தமான உணவுகளை நிறைய உண்ணுதல் வேண்டும். இனிய பழங்கள் நாள் தோறும் உண்ணத்தக்கன. உணவுக்குப் பணம் எந்த உபாயத்தால்ேனும் தேடிக் கொள்ளவேண்டும். தேகத்திலே உழைப்பும் மனத்திலே தைரியமும் இருந்தால் பணந்தேடுவது கஷ்டமில்லை. சோம்பேறி யாக ஒருவன் நிறையப் பணத்தைக் குவித்து வைத் துக்கொண்டு அக்கம் பக்கத்து ஜனங்கள் பட்டி கிடந்து சாவதைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கொடிய பாவம்.

செல்வர் கடமை

நயது நாட்டுச் செல்வர்கள் இவ்விஷயத்தைக் கவனிக்க வேண்டும். உன் சொத்தை எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, நீ ஏழையாக வேண்டு மென்று நான் சொல்லவில்லை. கைத்தொழில்களும் வியாபாரங்களும் ஏற்படுத்தி அக்கம் பக்கத்தாரிடம் சரியானபடி வேலை வாங்கிக்கொண்டு சரியானபடி கூலி கொடு, உனக்கும் நல்ல லாபம் கிடைக்கும். கூலி குறையக் கொடுக்கும் முதலாளி லக்ஷ்மிதேவி யைக் காலால் உதைக்கிருன். அவன் மகன் தரித் திரத்திலும் நோயிலும் வருந்துவான். ஸகல ஜனங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/163&oldid=605439" இலிருந்து மீள்விக்கப்பட்டது