இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதிய உயிர் I65
களுக்கும் வயிறு நிறைய உணவு கிடைக்காத ஊரில் வாழும் செல்வர்களெல்லாம் திருடர். அங்கே குருக்க ளெல்லாம் பொய்யர். பண்டிதரெல்லாம் மூடர். மேன்மை நிலை பெற வேண்டுமானல் கைத்தொழில் கள் பெருகும்படி செய்யவேண்டும். சாத்தியமில்லை யென்று சொல்லி ஏங்குவதிலே பயனில்லை. எப்படி யேனும், எப்படியேனும், செல்வத்தை வளர்க்க வேண்டும். மிச்சம் மற்றாெரு முறை சொல்லு கிறேன்.